Monday, July 18, 2011

கிரக பலத்தின் அள்வு

ஒரு ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சமாக இருந்தால் பூலோகமெல்லாம் தொழத்தக்க குரு ஆவான். நான்கு கிரகங்கள் உச்சமாக இருந்தால் அரசனாவான்  மூன்று கிரகஙகள் உச்சமாக இருந்தால் நீதிபதியாகவும் ராஜ்யாதிபதியாகவும் இருப்பான்.  இரண்டு கிரகம் உச்சம் பெற்றிருந்தால் சில ஊருக்கேனும் அரசனாக  இருப்பான்.

உச்சம் பெற்ற கிரகத்திற்கு 11/4 பங்கு பலம்.
ஆட்சி பெற்ற கிரகத்திற்கு 1 பங்கு பலம்.
கேந்திரம் பெற்ற கிரகத்திற்கு 3/4 பங்கு பலம்(கேந்திரம் என்பது 1.4.7.10).
நட்பு பெற்ற கிரகத்திற்கு 1/2 பங்கு பலம்
பகை பெற்ற கிரகத்திற்கு 1/4 பங்கு பலம்..